Saturday, 26 July 2008

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார் மஹிந்த

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,


அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த,

அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே தற்போது விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அப்படி பணிக்குத் திரும்பாதவர்கள் மீது இராணுவ நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments: