Tuesday, 15 July 2008

அரச தலைவர்களின் விஜயத்தின் போது கட்டுநாயக்ககொழும்பு வீதி மூடப்படும்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அரச தலைவர்கள் வருகைதருகின்ற நேரத்தில் மட்டும் கட்டுநாயக்க முதல் கொழும்பு வரையிலான வீதிகள் சுமார் 20 நிமிடங்கள் வரை தற்காலிகமாக மூடியிருக்கும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இதர முக்கியஸ்தர்கள் வருகைதருக்கின்ற போது வீதியின் ஒருபக்கம் மட்டும் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டு வாகனங்களும் அனுமதிக்கப்படும் இதேவேளை காலியிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்கின்ற ரயில் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

கண்டி மற்றும் ஏனைய இடங்களிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி வருகின்ற சகல ரயில்களும் மருதானை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ரயில் பயணிகள் பம்பலப்பிட்டி, மருதானை ஆகிய இடங்களிலிருந்து பஸ்கள் மூலம் தங்களது பயணங்களை தொடரலாம்.

இதேவேளை ஆகஸ்ட மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்றம் சுற்றுவட்டம் முதல் பாராளுமன்றம் வரையிலும் பெலவத்தை சந்திவரையிலான வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments: