Saturday, 5 July 2008

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கென பெருமளவிலான ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளுக்கே இந்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2800 டிப்ளோமா கல்வியியல் பயிற்சியினை முடித்தவர்களில் கணிசமானோருக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் மேற்கொண்ட முயற்சியின் பேரில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக் கல்வி, உடற்கல்வி உட்பட மற்றும் இதர பாடத்துறைகளுக்காகவும் ஆசிரியர் நியனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நியமனங்களின் மூலம் இதுகாலவரை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிவந்த பெருமளவிலான வெற்றிடங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மத்தியக் கல்விப் பிரிவின் ஏறாவூர். அல் ஜுப்ரியா வித்தியாலயத்திற்கு 2 ஆசிரியர்களும் ரஹ்மானியா, நவோதய பாடசாலைக்கு 2 ஆசிரியர்களும், அரபா வித்தியாலயத்திற்கு ஒரு ஆசிரியரும் சாஹீர் மௌலானா வித்தியாலயத்திற்கு ஒரு ஆசிரியரும் அரபா அல் முனீறா மற்றும் அல் அஸ்கர் வித்தியாலயங்களுக்கென தலா ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments: