

கொழும்பில் உள்ள ரகசியமான இடம் ஒன்றில் கருணா மற்றும் பிள்ளையான் இடையில் நாளை ( யூலை13) நேருக்கு நேரான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் பிள்ளையான் தரப்பு ஆதரவாளர்களும், கருணா தரப்பின் ஆதரவாளர்களும் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை வலுப்படுத்துவது, கட்சியில் கருணாவிற்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
முடிவு எட்டப்படா விட்டால் இறுதி முடிவு தொடர்பில் மேலும் பல சுற்று பேச்சுக்கள் கருணா பிள்ளையானுக்கு இடையில் இடம்பெறலாம் என கருதப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராக அரசாங்கத் தரப்பு பங்கேற்க உள்ளதாக ரி.எம்.பி.வியின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிரதி தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் இன்று மாலை கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கருணா தொடர்ந்தும் அமைப்பின் தலைவராக செயற்படவும்
பிள்ளையான் பிரதி தலைவராக செயற்படவும் இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் செயலராக இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
Saturday, 12 July 2008
(2nd lead)கருணா – பிள்ளையான் - இரகசிய சந்திப்பு!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment