Saturday, 12 July 2008

கருணா தரப்பைச் சேர்ந்த 2000 உறுப்பினர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு கருணா கோரிக்கை

கருணா பிள்ளையான் சமரசம் ஏற்படாத நிலையில் 2000 கருணா கூலிப்படையை அரச காவற்துறையில் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயுதப் பயிற்சி பெற்ற தமது அமைப்பின் உறுப்பினர்களை காவற்துறையுடன் இணைத்துக் கொள்ளுமாறும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ள தமது அமைப்பினருக்கு இவ்வாறானதொர் பின்னணி அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது சாலச்சிறந்தது எனவும் கருணா தெரிவித்தாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

இதே வேளை, பிள்ளளையானது ஆதரவாளர்களும் ஆயுதங்களுடன் செயற்பட்டு வருவதாக கருணா அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: