Thursday, 3 July 2008

விமலின் மாற்றுக் கட்சிக்கு அங்கீகாரம்

விமலின் மாற்றுக் கட்சியை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்கவின் தேசப்பிரேமி தேசிய முன்னணி கட்சிக்கு தேர்தல் ஆணையகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேர்தல் செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ச ஜே.வி.பி.யிலிருந்து பிளவடைந்து சென்ற போது பியசிறி விஜேநாயக்க, ஜே.என்.பி. கட்சியின் தொழிற்சங்க இணைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.

ஜே.என்.பி. கட்சியை பதிவு செய்வதற்காக விமல் வீரவன்ச பதிவிற்காக விண்ணப்பித்த அதே தினத்திலேயே பிஜயசிறி விஜேநாயக்க தேசப்பிரேமி தேசிய முன்னணி கட்சி பதிவிற்காக விண்ணப்பித்திருந்தார்.

இதுவரையில் 58 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று(ஜூலை 03) தேசப்பிரேமி தேசிய முன்னணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், ஜே.என்.பி. கட்சிக்கு தேர்தல் செயலகம் அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், கட்சி சின்னம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையினால் தேர்தலுக்கு போட்டியிடக்கூடிய கட்சிகள் பட்டியலில் இன்னமும் ஜே.என்.பி. சேர்க்கப்படவில்லை.

கடந்த மாகாணசபைத் தேர்தல்களைத் தொடர்ந்து 16 கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்திருந்த போதிலும், தேசப் பிரேமி தேசிய முன்னணிக்கு மாத்திரமே தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளார்.

தமது கட்சி உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளப்படாமையினால் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச இன்று (ஜூலை 3) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments: