Thursday, 3 July 2008

மன்னாரில் எண்ணெய் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க இந்திய கெய்ரன் நிறுவனத்துடன் இந்த வாரம் ஒப்பந்தம்

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுப்பணிகளை ஆரம்பிப்பதற்காக கிடைக்கப்பெற்ற கேள்விமனுக்களில், முதலாவது மனுவுக்கான அனுமதியை அரசாங்கம், நேற்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இந்திய கெய்ரன் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை அரசாங்கத்திற்கும் கெய்ரன் நிறுவனத்துக்குமிடையில் இம்மாதம் 7 ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த வருட ஆரம்பத்தில் அரசாங்கம் மன்னார் கடற்பரப்பின் மூன்று பகுதிகளில் எண்ணெய் அகழ்வுப்பணிகளை ஆரம்பிப்பதற்கு சர்வதேச ரீதியில் கேள்விப்பத்திரங்களைக் கோரியிருந்தது.

இவற்றில் இரண்டு பகுதிகளுக்கான கேள்விப்பத்திரங்களை கெய்ரன் நிறுவனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தது.

இந்த எண்ணெய் அகழ்வுப்பணிகளுக்காக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்திருப்பதாக அந்நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் தெரிவித்திருந்தது.

அத்துடன், இலங்கையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளுக்கான கேள்விப்பத்திர அனுமதி கிடைக்குமானால், ஒவ்வொரு பகுதியிலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டு அகழ்வுப் பணிகளை ஆரமப்பிக்கவுள்ளதாகவும் இந்திய கெய்ரன் நிறுவனம் தெரிவித்திருந்தது.


மன்னார் கடற்பரப்பில் எண்ணெயைக் கண்டறிவதற்கு சுமார் 2-3 வருடங்கள் தேவைப்படும் எனக் குறிப்பிட்டுள்ள கெய்ரன் நிறுவனம், அவ்வாறு எண்ணெய் கண்டறியப்பட்டால் முறையான எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு ஆகக் குறைந்தது 7 வருடங்களாவது தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் எண்ணெயைக் கண்டறிவதில் வெற்றிகண்டால், இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு பகுதிகளிலும் 10 வீத பங்குகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

ttpian said...

Throw North India bastarts into the oil!
those who are supporting srilankan army are our enemies:so India is the enemy of Tamileelam-but,people of tamilnadu are cousins of tamileelam!