Saturday, 19 July 2008

கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சிப்பதாக இலங்கைப்படையினர் கூறுகின்றனர்

வன்னியை நோக்கி இலங்கைப்படையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் இந்திய கடலின் ஆதிக்கத்தை குறைக்கமுடியும் என படைத்தரப்பு எதிர்ப்பார்ப்பதாக தெ ஐலெண்ட் ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது.

இதற்காக தமிழகத்தில் இருந்து வன்னிக்கான போக்குவரவை இந்தியா நிறுத்தினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல் ஆதிக்கத்தை மன்னார் வளைக்குடா பகுதியில் குறைக்கமுடியும்


என இலங்கையின் படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்தே, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆயுதவிநியோகங்கள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கைப்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

No comments: