கடந்த மூன்று மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மருதமடு மாத திருச்சொரூபம் இன்று மடு தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வெள்ளன்குளம் தேவன்பிட்டி புனித சேவியர் ஆலயத்தில் திருச்சொரூபம் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
இன்று முற்பகல் 11.30 அளவில் திருச் சொரூபம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு கன்னியாஸ்திரிகளும், இரண்டு பிதாக்களும் திருச் சொரூபத்துடன் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் பிதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும், படையினருக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்த காரணத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி தேவன்பிட்டி தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

No comments:
Post a Comment