சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரையில் ஒளிப்படங்களின் பங்கு அளப்பரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். |
மன்னார் களமுனையில் சிறப்பான களப்படப்பிடிப்பை மேற்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற போராளிகளை மதிப்பளித்தல், வீரவேங்கை அருச்சுனாவின் 22 ஆம் ஆண்டு நினைவு மற்றும் மூன்றாவது தேசிய ஒளிப்படப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் போராட்டத்தின் தொடக்க கால வரலாற்றை இன்று ஒளிப்படங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. புலம்பெயர்ந்த எமது மக்கள் மத்தியிலும் பன்னாட்டு அரசுக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான போர் நடவடிக்கைகளை வெளிப்படுத்துபவையாக ஒளிப்படங்கள் உள்ளன. தமிழர்களின் தொடக்ககால வரலாற்று ஆவணமாக பேணப்படாத சூழ்நிலையில் எமது விடுதலைப் போராட்டம் தொடக்கப்பட்ட பின்னர் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் மக்களின் எழுச்சியையும் ஒளிப்படங்கள் ஆவணப்படுத்தி உள்ளன. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒளிப்படங்களுக்கு முதன்மைப்பங்கு உண்டு. இன்றுகூட சிறிலங்காப் படையினர் நடத்திவரும் போர் நடவடிக்கைகள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான்தாக்குதல்கள் என்பவற்றை ஊடகங்கள் ஊடாக புலம்பெயர்ந்த எமது மக்களுக்கும் பன்னாட்டு அரசுகளுக்கும் எடுத்துச்சென்று சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்தி நியாயங்களைத் தேடிக்கொள்வதில் ஒளிப்படங்களின் பங்கு முதன்மையானதாகும். சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள பொருண்மியத் தடைகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை வெளிக்கொணர்வதில் ஒளிப்படங்களின் பங்கு அளப்பரியது. ஊடகத்துறையில் இன்று ஒளிப்படங்கள் பெரும் ஆட்சி புரிகின்றன. எமது விடுதலைப் போராட்டத்திலும் போராளிகள் எமது விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்துவதில் தமது உயிர்களை ஈர்ந்து மாவீரர்கள் ஆகியுள்ளனர். போராளிகளின் ஈகத்தினால்தான் எமது வீரவரலாறு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஒளிக்கலைத்துறை பெரும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதில் பெருவிருப்பு கொண்டுள்ளார். அமைதிப் பேச்சுக்காலங்களில் ஒளிப்படங்களை நாம் எடுத்துசென்று தமிழ்மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் புரியும் கொடூரங்களை பன்னாட்டு அரசுகளிடமும் மனித உரிமை அமைப்புக்களிடமும் வழங்கினோம். சிறிலங்கா அரசாங்கத்துக்கு பன்னாட்டு அரசுகள் அழுத்தம் கொடுப்பதற்கு ஒளிப்படங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது என்றார் அவர். |
Monday, 14 July 2008
சிறிலங்கா அரசுக்கு எதிரான பரப்புரையில் ஒளிப்படங்களின் பங்கு அளப்பரியது: பா.நடேசன்
Subscribe to:
Post Comments (Atom)

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரையில் ஒளிப்படங்களின் பங்கு அளப்பரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment