Monday, 7 July 2008

கருணா வருகையால், மகிந்தவின் கவலைகள் அதிகரிப்பு- சண்டேலீடர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஜூலை முதலாம் திகதியிலிருந்து பிரான்ஸ் பொறுப்பெடுத் திருப்பதாலும் மூதூரில் பிரெஞ்சு


மனித நேய அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் கொலையுண்ட சம்பவம் தொடர்பாகவும் எழக்கூடிய மனித உரிமை சிக்கல்கள் விடயத்தில்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிக கவலை ஏற்பட்டிருப்பதாக "சண்டேலீடர்' பத்திரிகை விமர்சித்துள்ளது.

மூதூரில் மனித நேய பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயத்தை பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் "ஏசிஎப்' நிறுவனம் சர்வதேச ஆணைக்குழுவின் விசாரணைக்கு விட வேண்டும் என்று அண்மையில் கேட்டிருந்தது. இந்த விடயத்தை தீவிரமாகக் கவனத்தில் எடுப்பதற்கு ஆயத்தமாக விருப்பதாக பிரான்ஸ் அரசும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அனுப்புவதற்கு பிரெஞ்சு அரசு கொழும்பிலுள்ள தனது தூதரகத்தில் தனியாக ஓர் அலுவலரை நியமித்துள்ளது. இவரது அறிக்கையின் மீதே பிரான்ஸ் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்கும்.

இதற்கிடையில் மூதூர் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக் குழுவில் அண்மையில் சாட்சியமளித்த சாட்சியொருவர் மேற்படி சம்பவம் நடந்த சமயம் இலங்கை இராணுவம் தான் அப்பகுதிக்குப் பொறுப்பாய் இருந்தது என்றும் கொலைஞர்களில் ஒருவராவது கடற்படையுடன் தொடர்புடையவராய் இருந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இத்துடன் இங்கிலாந்திலிருந்து கருணா இலங்கை வந்திருப்பதும் அரசுக்குத் தலையிடியை அதிகரித்திருக்கிறது. மேலும் 1990ஆம் ஆண்டு 600 பொலிசாரை த.ஈ.வி.புலிகள் கொலை செய்தார்கள் என்ற விடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசு தீர்மானித்திருக்கும் தறுவாயில் கருணா வந்த சேர்ந்துள்ளார். குறித்த படுகொலைகள் நடைபெற்ற சமயம் மட்டக்களப்புக்கு கருணாவே பொறுப்பாக இருந்துள்ளார்.

மேலும் கருணா இங்கிலாந்தில் அளித்த வாக்குமூலத்தில் தாம் பொய்யான அடையாளத்தின் மீதே இலங்கையிலிருந்து பிரயாணம் செய்ததாக ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்குத் திரும்பிய வேளையில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.

இந்த நிலையில் கருணாவுக்கு சலுகைக் காட்டப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள அதே நேரம் எதிர்வரும் தேர்தல்களில் தாம் போட்டியிடப்போவதாகவும் கருணா அறிவித்துள்ளார்.

இந்த விடயம் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் எதிர்க்கட்சி யினர் பெரிதாகப் பிரசாரம் செய்வதற்கு இடமளிப்பதாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு சண்டேலீடர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

1 comment:

ttpian said...

soon mahindha will have to stand in the war crime tribunal(s)