Wednesday, 2 July 2008

ஹெலியில் நான்கு துவாரங்களை கண்டேன்...

ராஜபக்ஷ பயணித்த ஹெலிகொப்டருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஐந்து ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்களை கண்டேன். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அஹமது மொஹைதீன் அப்துல் மஜீட் தெரிவித்தார்.

பி.பி.சி.செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுனாமியினால் பாதிக்கப்பட்ட அறுகம்பை பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 10.30 மணிக்கு வருகை தருவதாக இருந்தார். எனினும் ஜனாதிபதி 12 மணியளவிலேயே வந்தடைந்தார்..

பாலம் திறப்பு விழாவிலும் அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் நான் கலந்து கொண்டேன். எனினும் ஜனாதிபதியை இறக்கிவிட்டு சென்ற ஹெலிகொப்டரில் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூட்டம் முடிந்த 15 நிமிடங்களுக்கு பின்னர் எனக்கு தகவல் கிடைத்தது.

அந்த தாக்குதல்களை புலிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரையும் பார்த்தேன். அந்த ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்கள் இருந்ததை கண்டேன். துப்பாக்கி சூட்டினாலேயே இந்த துவாரங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கு கடமையிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார் என்றார்.

1 comment:

ttpian said...

one can find so many HOLES in srilankan bleeding economy!