முகமாலை, கிளாலி மோதல்களின் போது கொல்லப்பட்ட 143 இராணுவப் படைவீரர்களது சடலங்கள் கொழும்பில் உள்ள மூன்று மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தரமுல்ல, மாலம்பே மற்றும் பொரளையில் அமைந்துள்ள மூன்று மலர்ச்சாலைகளுக்கே இந்த சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளவும், முறையே 38, 30 மற்றும் 75 சடலங்கள் குறித்த மலர்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தத் தாக்குதல்களின் போது 43 இராணுவப் படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 33 படைவீரர்களை காணவில்லை எனவும், இந்த மோதல்களில் 120க்கும் மேற்பட்ட இராணுவப் படைவீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி பாதகாப்புத் தரப்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 30 இராணுவப் படைவீரர்களது சடலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவற்றில் 19 சடலங்களை கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், குறித்த சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நெற் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Thursday, 24 April 2008
கொழும்பில் இராணுவத்தினரின் 143 உடலங்கள்?--சவப் பெட்டிகளை ஒழுங்குகளை செய்யும் நிறுவனங்கள் அம்பலப்படுத்தியுள்ளன!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Mahindha,pl.approach ur friends,china,pakisthan,USA to send 70,000 death boxes!
Post a Comment