மன்னார் மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் வகையில் சிறிலங்காப் படையினர் வெறித்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
மடுவுக்கு தெற்காக உள்ள பண்டிவிரிச்சான் பக்கமாக 1,500 மீற்றர் தொலைவில் நேற்றும், இன்றும் சிறிலங்காப் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
பண்டிவிரிச்சான் பகுதியிலிருந்து மடு புனித வளாகப்பகுதியில் தொடர்ச்சியாக சிறிலங்காப் படையினர் எறிகணைத்தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
மடு கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கோவிலுக்குரிய பகுதிகளில் படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன.
இதனால் கோவிலுக்குரிய கட்டடங்கள் கிணறுகள் ஆகியன சேதமாகியுள்ளன.
எங்கும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. கோவிலுக்குள் இருக்கும் மடுப் பரிபாலகர், மதகுருமார் மற்றும் கோவில் பணியாளர்கள் இரண்டு நாட்களாக பதுங்குகுழிக்குள் தான் இருக்கின்றனர்.
சிறிலங்கா அரசு மடு தேவாலயத்தை அழிக்கும் வகையில் தாக்குதலை வெறித்தனமாக நடத்திக்கொண்டிருக்கின்றது.
மணல்மோட்டைப் பகுதி மோதலில் 10 படையினர் பலி
மன்னார் கட்டுக்கரை மணல்மோட்டைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வுத் தாக்குதலை இன்று அதிகாலை 5:00 மணிக்கு மேற்கொண்டுள்ளனர்.
பாலைப்பெருமாள் கட்டுப்பகுதி நோக்கியதாக சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல்கள் அமைந்துள்ளன.
இங்கு மோதல்கள் தொடர்கின்றன.
இன்று மாலை வரை இந்த நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களில் படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர். 40 படையினர் காயமடைந்தனர்.
Wednesday, 2 April 2008
மன்னார் மடுப்பகுதிக்கு 1,500 மீற்றர் தொலைவில் கடும் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. - 15 படையினர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment