அரசாங்கம், இன்னுமொரு பாரிய அதிகூடுதலான வட்டிவீதத்திற்கு வர்த்தக கடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்ளை காரணமாக பணவீக்கம் பாரிய விதத்தில் அதிகரித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் அளவுக்கு அதிகமாக பணத்தை அச்சடிப்பதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என ஐக்கிய தேசிய கட்சி கூறியிருந்தமையை நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, மந்தமாகக் கூடிய நிலை தோன்றியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியும் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 6.8 சதவீதமாக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் நடப்பு வருடத்தில் 6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது. உயர் வட்டி வீதம் மற்றும் உலகலாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்;பவற்றின் காரணமாகவே இந்த நிலை தோன்றியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
Thursday, 3 April 2008
வட்டிக்கு கடன் எடுப்பதில் இலங்கை அரசாங்கம் சாதனையை ஏற்படுத்த உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment