Thursday, 3 April 2008

மஹிந்த அரசாங்கத்தின் தலைவர்கள் கிழக்கை நோக்கி படை எடுக்க உள்ளனர்.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அனைத்து முக்கிய பிரமுகர்களையும் அங்கு சென்று கடமைகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டியுள்ளார். கிழக்கு மாகாண தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று நண்பகலுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் அங்கு சென்று கடமைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இதேவேளை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்குமான செயற்குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளர்களாக அமைச்சர்களான நிமல் ஸ்ரீபால டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே திருகோணமலை மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளுக்கு பொறுப்பாக அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நியமித்துள்ளது.

No comments: