விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த கிழக்கு மாகாணத்தில் தற்போது ஜனநாயக ஆட்சி நிலவுவதாக காட்டுவதற்காகவே அரசாங்கம் அங்கு தேர்தலை நடத்த முனைகிறது என மனித உரிமை செயற்பாட்டாளரான ஹென்றி மில்லர் தெரிவித்துள்ளார். 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இவர்களின் இந்த வெற்றியானது அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையின் வெளிப்பாடாக பயன்படுத்தப்படலாம் என ஹென்றி மில்லர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அரசாங்கம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை தனது துரும்பாகவே பயன்படுத்தும் என தான் ஊகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கொண்டு கிழக்கில் ஜனநாயகமயப்படுத்தப்பட்ட, சுதந்திரமான ஆட்சியை தாம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக் சர்வதேச சமூகத்திற்கு காட்ட முற்படுவதே அரசாங்கத்தின் திட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமிழ் போராளிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுத்துச் செல்லும் இந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் அனைவரையுமே பயங்கரவாதிகளாக நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்;. வடக்கில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் தோன்றக்கூடிய நிலைமை உருவாகிக் கொண்டுவரும் நிலையில்,அந்த நிலைமை விரைவில் மாறக்கூடியதாக இல்லை என ஹென்றி மில்லர் எதிர்வை வெளியிட்டுள்ளார்;.
Thursday, 3 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment