ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தெற்கு ரெயில்வேயில், கிரிமினல் சதி மற்றும் பணம் கையாடல் மோசடியில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் முதுநிலை குமாஸ்தா எம்.கே.நாகேந்திர குமார், உதவிப் பொறியாளர் அனந்தராமு, செயல் பொறியாளர் ஜி.என்.ராவ், பாலங்கள் பிரிவு உதவி பொறியாளர் எஸ்.ராமானுஜன், கே.எஸ்.நாராயணமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 1991-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
ரூ.18 லட்சம் மோசடி
இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பெங்களூரில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை பொறியாளர் (கட்டுமானங்கள்) பெயரில் உள்ள வாகனங்களுக்கு சாலை வரி செலுத்தியதாகவும், அந்த வாகனங்களுக்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை பெற்றதாக கூறி அந்த நிறுவனங்களின் பெயரில் பணம் செலுத்தும் ஆணை (`பே ஆர்டர்') தயார் செய்து பணம் கையாடல் செய்ததாகவும் இதன் மூலம் தெற்கு ரெயில்வேக்கு சுமார் ரூ.18 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் தெரிய வந்தது.
மேலும் பெங்களூரில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை பொறியாளர் (கட்டுமானங்கள்) பெயரில் வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.
சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணை
இந்த வழக்கை டெல்லியில் உள்ள கூடுதல் நகர சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு (சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு) நீதிபதி சுதாகர் பண்டிட் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின் போது கே.எஸ்.நாராயணமூர்த்தி மரணம் அடைந்து விட்டார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
4 பேருக்கு ஜெயில்
கிரிமினல் சதியில் ஈடுபட்டு ரெயில்வே துறையை ஏமாற்றியதாக கூறி முன்னாள் முதுநிலை குமாஸ்தா எம்.கே.நாகேந்திரகுமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், உதவி பொறியாளர் அனந்தராமு, செயல் பொறியாளர் ஜி.என்.ராவ், பாலங்கள் பரிவு உதவி பொறியாளர் எஸ்.ராமானுஜன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேற்கண்ட தகவல்களை சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
Thursday, 10 April 2008
ரூ.18 லட்சம் மோசடி தெற்கு ரெயில்வே அதிகாரிகள் 4 பேருக்கு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment