Thursday, 10 April 2008

ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு தடை : கனடா முடிவு

வரும் 2010-ம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதி ஓட்டத்தை தடை செய்யப்போவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது : தற்போது சீனாவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஒட்டம் பல்வேறு நாடுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும்சீனா அரசு மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் ஜோதி ஒட்டத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 2010 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

No comments: