Thursday, 10 April 2008

இலங்கை அகதிகள் 7 பேர் வருகை

இலங்கை திரிகோணமலை, வவுனியா ‌பகுதியில் இருந்து 4 குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக மண்டபம் கடற்கரைக்கு படகில் வந்திறங்கினர். இலங்கையில் இவர்கள் கூலி ‌வேலை செய்ததாகவும், ராணுவ தாக்குதலில் உறவினர்களை இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள படகு கட்டணமாக ரூ. 30 ஆயிரம் கொடுத்து படகில் வந்து காத்திருந்ததாக அகதிகளாக வந்தவர்கள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments: