![]() |
| பிரிட்டனில் தயாராகும் போர் விமானங்கள் |
பல லட்சக்கணக்கான டாலர்கள் பெறுமதியான இந்த ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, சவுதி அதிகாரிகளுக்கு, பிரிட்டிஷ் நிறுவனமான பி ஏ ஈ சிஸ்டம்ஸ் நிறுவனம், லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரை கடுமையான மோசடிகளை கையாள்வதற்கான அலுவலகம் புலன் விசாரணை செய்து வந்தது.
அந்த அலுவலகத்தையும், பிரிட்டிஷ் அரசையும் விமர்சித்த நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், பிரிட்டனுக்கு வெளியேயோ அல்லது உள்ளேயோ இருக்கும் எவருக்கும் பிரிட்டனின் நீதித்துறையில் தலையிட உரிமை கிடையாது என்றார்.
2006 ஆம் ஆண்டில் இந்த விசாரணை நிறுத்தப்பட்ட போது, அப்போதைய பிரதமரான டோனி பிளேர் அவர்கள், இந்த விசாரணை, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுறவு உட்பட, பிரிட்டனின் கேந்திர ரீதியான அபிலாசைகளுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறியிருந்தார்.


No comments:
Post a Comment