Friday, 11 April 2008

ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்க மறியலில்.

ஜே.வி.பியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விமல் வீரவன்ஸ அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் வாகனங்களை கடத்திச் சென்றமை தொடர்பில் வெலிகடை காவல்துறையினரிடம் சரணடைந்த ஜயந்த விஜேசேகர இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பியசிறி விஜேநாயக்க, அச்சல ஜாகொட ஆகியோர் தமது வாகனங்கள் காணாமல் போயிருப்பதாக சபாநாயகர் மற்றும் வெலிகடை காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டில் விஜேசேகர மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்ததுடன் அவரை கைதுசெய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் இன்று சரணடைந்தார்.

No comments: