ஜே.வி.பியின் முன்னாள் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸவின் அணியில் இருந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அணியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில, அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணவீர பதிரண, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜாத அழககோன் ஆகியோர் தாம் சூழ்ச்சி ஒன்றில் சிக்கியதாகவும் விமல் வீரவன்ஸ கட்சிக்கு எதிராக பாரிய தவறுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவரின் இந்த தவறுகள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு உரிய நடவடிக்கை எடுக்கும். வீரவன்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து சென்றவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் வருவார்கள் எனவும் இவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு செல்வதாக கூறி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வழங்கிய பின்னர், ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற நிபோன் விடுதிக்கு தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரணவீர பத்திரண, சுஜாதா அழககோன் ஆகியோர் குறிப்பிட்டனா.
Friday, 11 April 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment