Friday, 11 April 2008

ஜே.வி.பி.யின் சர்ச்சைக்கு மத்தியில் லங்கா பத்திரிகை நிறுவனம் மூடப்படவுள்ளது

ஜே.வி.பி.க்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக கட்சியின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட லங்கா ஞாயிறு பத்திரிகை நிறுவனத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள லங்கா டிசென்டிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எதிர்வரும் 13ம் திகதிய பதிப்பிற்கு பின்னர் இந்தப் பத்திரிகை பிரசூர நடவடிக்கைகளை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமாக செயற்பட்டு வந்த இந்த பத்திரிகை நிறுவனத்திற்கு வெளிநாட்டில் வசிக்கும் ஜே.வி.பி.யைச் சேர்ந்த சிலர் நிதி உதவி வழங்கியதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, லங்கா பத்திரிகைக்கு உதவி புரிந்த நபர்கள் ரிவிதா என்ற புதிய பத்திரிகையொன்றை பிரசுரிக்க உதவியளிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும், விமல் வீரவன்சவின் மேற்பார்வையின் கீழ் ரிவிதா பத்திரிகையை சயூரி பத்திரிகை நிறுவனம் பிரசுரிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

லங்கா பத்திரிகையின் உள்ளடக்கத்தில் மாற்றங்களை மேற் கொள்ளாது எதிர்வரும் 27ம் திகதி முதல் ரிவிதா பத்திரிகை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா பத்திரிகையைப் போன்றே வீ எப்.எம். வானொலிச் சேவைக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களே உதவி புரிகின்றனர்.

எனவே சில வேளைகளில் வீ எப்.எம். வானொலிச் சேவையும் ஜே.வி.பியின் கைகளைவிட்டுச் செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

No comments: