Thursday, 10 April 2008

நிறுவன இணைப்பு: யாஹூ-ஏஓஎல் பேச்சு

யாஹூ இங் நிறுவனமும் டைம் வார்னர் இங் நிறுவனமும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையை ஏறக்குறைய நிறைவு செய்திருப்பதாக தெரிகிறது.

டைம் வார்னரின் ஏஓஎல் இண்டர்நெட் பிரிவுடன் இணைவதன் மூலம் மைக்ரோசாஃப்ட் உடன் இணையும் நடவடிக்கையை தவிர்க்க யாஹூ திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
யாஹூ-ஏஓஎல் கூட்டு வர்த்தகத்தின் 20 சதவீதப் பங்குகளைப் பெறுவதற்காக டைம் வார்னர் நிறுவனத்திடம் இருந்து யாஹூவிற்கு ரொக்கப்பணம் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஓஎல் டயல் அப் இண்டர்நெட் வர்த்தகம் மற்றும் மதிப்பு ஏஓஎல் இந்த ஒப்பந்தத்தில் அடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மைக்ரோசாஃப்ட் மற்றும் ரூபர்ட் முர்டோக் நியூஸ் கார்ப்பரேஷன் இணைந்து யாஹூ ஏலத்தில் கூட்டாகப் பங்கேற்க பேச்சு நடைபெறுவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

No comments: