முஸ்லிம் மதத்தவரின் புனித நூலான குரானில் உள்ள கருத்துகளை தவறாக சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தை பிரபல யூ-டியூப் இணையதளம் வெளியிட உள்ளதால், அத்தளத்திற்கு இந்தோனேஷிய அரசு தடை விதித்துள்ளது.
யூ-டியூப் தளத்திற்கான இணையதள சேவை அளித்து வந்த 4 இந்தோனேஷிய நிறுவனங்களுக்கு, அத்தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் மற்றும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை திரட்டி, குரான் வலியுறுத்திய கருத்துக்கு எதிராக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை டென்மார்க்கைச் சேர்ந்த கிரீட் வில்டர்ஸ் இயக்கியுள்ளார்.
குரானில் உள்ள அத்தியாயத்தை பற்றிய வாசகங்களுடன் துவங்கும் இந்தக் குறும்படம், முகமது நபிகள் தலைப்பாகைக்குள் வெடிகுண்டு வைத்துக் கொண்டிருப்பது போன்ற கார்ட்டூன் படத்துடன் நிறைவடைகிறது.
உலகளவில் அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் நாடான இந்தோனேஷியாவில், இப்படம் வெளியானால் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்ற நோக்கத்திலேயே யூ-டியூப் தளத்திற்கு தடைவிதித்ததாக அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Thursday, 10 April 2008
யூ-டியூப் தளத்திற்கு இந்தோனேஷியா தடை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment