Thursday, 24 April 2008

கொழும்பின் 3 மலர்ச்சாலைகளில் 143 படையினரின் உடல்கள்- பலி எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு-புதினம்.com

வட போர்முனையில் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் உக்கிர முறியடிப்புத் தாக்குதலில் 176 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 76 சடலங்களும்

பத்ரமுல்ல மலர்ச்சாலைக்கு 37 சடலங்களும்

மாதம்பே மலர்ச்சாலைக்கு 30 சடலங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மூன்று மலர்ச்சாலைகளுக்கும் மொத்தம் 143 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கொல்லப்பட்டோரின் சடலங்களை மீண்டும் படையினரிடம் ஒப்படைப்பதற்கு தாங்கள் தயாராகியிருக்கின்ற போதும் சடலங்களுக்கு அணிவிக்கும் சீருடைகள் கிடைக்கததால் அந்தச்டலங்களை மலர்ச்சாலையிலேயே வைத்திருக்க வேண்டியிருப்பதாக பொரளை மலர்ச்சாலைப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமது தரப்பில் 33 படையினரைக் காணவில்லை என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

காணாமல் போன அந்த 33 படையினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால் சிறிலங்காப் படைத்தரப்பில் 176 பேர் கொல்லப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 400-க்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் 286 படையினர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் 21 பேரின் நிலைமை ஆபத்தாக உள்ளது.

அவர்கள் அனைவரும் அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

51 படையினர் தமது கால்களை இழந்துள்ளனர்.

புலிகளின் தாக்குதலில்

படையினரின் T-55

மற்றும்

T-89 ரகங்களைச்

சேர்ந்த 4 டாங்கிகள் முற்றாக அழிவடைந்துள்ளன.

மேலும் 2 டாங்கிகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22 ஆம் நாள் T-55 ரக டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

ttpian said...

keep some more space-more and more bodies will come-incase if there is no room,pl ask mahindha&Sarath fonseka to vacate their home;so that dead bodies of sla can be kept there!
AVALATTHAI THANTHAVANUKKU AVALATHAI THIRUPPI KODU!