கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது இரிஞாலகுடா. இங்குள்ள கோயிலில் தற்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவில் பங்கேற்க உன்னிக்கிருஷ்ணன் என்ற யானை வந்தது. நேற்று 5ம் நாள் திருவிழா கொண்டாடப்பட்டது. மதியம் 12.20 மணியளவில் விழா கூட்டத்துக்குள் யானை சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது சிலர் யானையின் வாலில் உள்ள குஞ்சத்தைப் பிடித்து இழுத்துள்ளனர். வலி தாங்காமல் யானை பிளிறி கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த பொது மக்கள் தலை தெறிக்க ஓடினர். கூட்ட நெறிசலில் சிக்கிய பெண் கவுசல்யா (75) என்ற பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவரை யானை மிதித்துக் கொன்றது.
பின்னர் மீண்டும் மக்களை விரட்டிக் கொண்டு ஓடியது. நிதீஷ் மற்றும் நவுஷாத் ஆகியோரை தந்தத்தால் குத்தியும், மிதித்தும் கொன்றது. கோயிலை சுற்றி சுற்றி ஓடியது. இதனால் மக்கள் பீதியடைந்து ஓடினர். ஓடி ஓடி களைத்த யானை, கோயில் குளத்தில் தண்ணீர் குடித்தது.
அப்போது கால்நடை மருத்துவர்களும் பாகன்களும் சேர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி யானையை பிடித்தனர். அந்த பகுதியே போர்க்களமாக காணப்பபட்டது. யானையின் இந்த கொடூரமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
video:http://isooryavidz.blogspot.com/2008/04/elephant-kills-3-in-temple-rampage.html
No comments:
Post a Comment