இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் தஞ்சாவூரில் நேற்று (24-04) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு நடைபெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதிப் பேச்சுக்கு வழி வகுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக சட்ட பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் இந்த தீர்மானத்தை கொண்டு வரும் முனைப்புகளை பாட்டாளி மக்கள் கட்சியே மேற்கொண்டது எனவும் கூறினாh.; ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்மானத்தை தமிழக முதல்வர முன்மொழிந்ததையும் அவர் வரவேற்றுள்ளார்.

No comments:
Post a Comment