Monday, 14 April 2008

இந்தியா-பங்களாதேஷ் இடையே 43 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியது

இந்தியா-பங்களாதேஷ் இடையே 43 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியது.

கொல்கத்தா-டாக்கா இடையிலான இந்த புதிய ரயில் சேவை இன்று மறியல், போராட்டங்களுக்கு மத்தியில் புறப்பட்டுச் சென்றது. இதை வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடியசைத்து இயக்கி வைத்தார்.

வங்காள புத்தாண்டையொட்டி இன்று காலை 'மொய்த்ரீ டிரெயின்' (நட்புறவு ரயில்) என்ற இந்த ரயில் இயக்கி வைக்கப்பட்டது. அதே போல டாக்காவின் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து இதன் இணை ரயில் இந்தியாவுக்குக் கிளம்பியது.

கொல்கத்தாவிலிருந்து கிளம்பிய ரயிலை ஆரங்ஹடா என்ற இடத்தில் ஆம்ரா பெங்காலி அமைப்பைச் சேர்ந்த போராட்டகாரர்கள் தடுத்தனர். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் வந்து அவர்களை அகற்றியபின் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்தியாவிலிருந்து சென்ற ரயிலில் பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகளும் செல்கின்றனர்.

டாக்கா-கொல்கத்தா இடையே முன்பு ரயில் சேவை இருந்தது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே 1965ல் போர் வெடித்தபோது இந்த சேவை ரத்து செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

No comments: