அமெரிக்காவின் பெர்க்ளி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய தமிழ்ப் பீடத்தின் பத்தாவது ஆண்டு விழாவையொட்டி, முதல்வர் கருணாநிதியின் எழுத்தோவியங்களின் தொகுப்பான 'கலைஞர் களஞ்சியம்' எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர், கருணாநிதியிடம் வழங்குகிறார்.
மேலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பீடத்தின் சார்பில் நினைவுப் பரிசையும் டேவிட் ஹூப்பர் வழங்குகிறார்.
இதற்கான விழா அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இதில் அமைச்சர்கள், தமிழறிஞர்கள், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment