பூநகரி வரையான மேற்குக் கரையை சிறிலங்காப் படையினர் கைப்பற்ற 9 மாதங்கள் தேவைப்படும் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த நேசன்" கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் த நேசனில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை:
விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் தொடர்பான தகவல்களை சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இரகசியமாக வழங்கி வந்த போதும், விடுதலைப் புலிகள் அண்மையில் ஒரு தொகுதி ஆயுதங்களை இந்து மா கடல் ஊடாக தரையிறக்கி உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனிடையே மடுப் பிரதேசத்தை படையினர் அண்மித்து வருகையில் விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். எனவே விடத்தல்தீவை கைப்பற்றும் இராணுவத்தின் நோக்கம் மேலும் 3 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமாக தாமதமாகலாம்.
எனினும் விடத்தல்தீவை மட்டும் கைப்பற்றுவது போதுமானதாக இருக்காது. இராணுவத்தினர் பூநகரி நோக்கி நகரும் திட்டத்தையும் கொண்டுள்ளனர்.
ஆனால் பூநகரி வரையுள்ள முழுமையான மேற்கு கரை 50 கி.மீ. நீளமானது. அதனைக் கைப்பற்ற 9 மாதங்கள் தொடக்கம் ஒரு வருடம் எடுக்கலாம்.
இந்தக் காலப்பகுதிக்கு முன்னதாக இராணுவத்தின் முன்னணி ஜெனரல்கள் நான்கு பேர் அடுத்து வரும் 9 மாதங்களில் ஓய்வுபெற உள்ளனர்.
மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 55 வயதினை அடைவதால் ஓய்வுபெற உள்ளார்.
இராணுவத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோ மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வுபெறும் வயதினை அடைந்து விடுவார்கள்.
மேலும் இராணுவத்தின் 3 ஆம் நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிசங்க விஜயசிங்க அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் ஓய்வுபெற உள்ளார்.
தற்போதைய படை நடவடிக்கையை வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அது சிறிலங்காவின் வரலாற்றில் மிக நீண்ட படை நடவடிக்கையாகும். பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது.
ஏ-9 பதையை திறப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த படை நடவடிக்கை காலத்தில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் குறைந்த அளவிலான எதிர்ப்பினையே காட்டியிருந்தனர்.
ஏனெனில் அவர்களுக்கு யாழ். குடாவுக்கான மாற்றுப் பாதையை திறக்கும் இராணுவத்தின் பிரதான நோக்கம் தெரிந்திருந்தது. தற்போதைய படை நடவடிக்கை மேற்குக்கரைப் பகுதியை கைப்பற்றி விடுதலைப் புலிகளின் விநியோகத்தை தடுக்கும் நோக்கத்தை கொண்டது.
மேலும் பலாலி படைத்தளத்தை நெருக்கடிக்குள் உள்ளாக்கி வரும் பூநகரிப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகளை அகற்றுவதும் அதன் மற்றுமொரு நோக்கம்.
சங்குப்பிட்டியில் இருந்து யாழ். குடாநாட்டிற்கு படகுச் சேவையை ஆரம்பிப்பதும் இந்த படை நடவடிக்கையின் அரசியல் - இராணுவ நோக்கங்களாகும். ஆனால் விடுதலைப் புலிகள் தமது அணிகளை விலக்கிய பின்னர் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தால் இந்தக் கரையோரப் பகுதிகளை பாதுகாக்க இராணுவத்தின் இரண்டு டிவிசன்கள் முழுமையாக தேவை.
ஆனால் இராணுவத்தினால் அது முடியுமா என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வி.
இராணுவம் மணலாற்றில் மேலும் ஒரு களமுனையை திறந்துள்ள போதும் அது விடுதலைப் புலிகளை திசை திருப்பும் உத்தியாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, 22 April 2008
பூநகரி வரையான மேற்குக் கரையை கைப்பற்ற 9 மாதங்கள் தேவை: "த நேசன்"
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment