Thursday, 10 April 2008

இந்து மதத்தை கிண்டல் அடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, ஹாலிவுட் படம்”லவ் குரு”வுக்கு, அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு


inl09.jpgஇந்து மதத்தை கிண்டல் அடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, ஹாலிவுட் படம்”லவ் குரு”வுக்கு, அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “லவ் குரு” படத்தை பாரமவுன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது; கனடாவை சேர்ந்த ஹாலிவுட் காமெடி நடிகர் மைக் மியர்ஸ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தியாவுக்கு சென்று வேதம் கற்று, யோக கலைகளை அறிந்து அமெரிக்கா திரும்பியவர் குரு மவுரிஸ் பிட்கா; 35 வயதான இவரை கிண்டல் அடித்துத்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. குரு பிட்கா வேடத்தில் மைக் மியர்ஸ் நடித்துள்ளார். இந்த படத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகளும், இந்து சாமியார்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இந்து மதத்தையும், வேதங்களையும் மட்டுமின்றி, இந்தியாவில் பல நுõற்றாண்டுக்கு முன் உருவாக்கப் பட்ட, உலகம் முழுவதும் போற்றப்படும் யோகக் கலையை கிண்டில் அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளனர். பாரமவுன்ட் நிறுவனம் இதை மறுத் துள்ளது. “படத்தில் இந்து மதத்தையோ, ஆன்மிக தலைவர்களையோ கிண்டல் அடிக்கவே இல்லை. தீபக் சோப்ரா போன்ற இந்து மதத் தலைவர்களுக்கு விசேஷ காட்சியாக போட்டுக் காட்டத் தயார்’ என்று கூறியுள்ளது. இந்தப்படம் தொடர்பாக வெப்சைட்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின் றன. ஜூன் மாதம் படம் திரையிடப்படுகிறது.

No comments: