Friday, 18 April 2008

கொழும்புத் துறைமுகத்தில் கப்பல் ஒன்று தடுத்துவைப்பு

image

போலி ஆவணம் குறித்து விசாரணை

போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாகக் குற்றம்சாட்டி வெளிநாட்டுக் கப்பல் ஒன்றைக் கொழும்புத் துறைமுகத்தில் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
கப்பலில் சில குறைபாடுகள் காணப்படுவதைக் கண்டுபிடித்த பின்னரே அதனை அதிகாரிகள் தடுத்து வைத்தனர் என்று துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கப்பலின் இயந்திரங்கள் திறன் அற்றவை என்றும் கப்பலில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் தகுதிஅற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கடல்போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய, கடற்பயணத்துக்குத் தகுதியானதாக கப்பல் காணப்படுகின்றதா என்பதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் கப்பலுக்குள் சென்றவேளையே இது தெரியவந்துள்ளது.

No comments: