Friday, 18 April 2008

பெண்களை மட்டும் துரத்தி கடிக்கும் கருங்குரங்கு

நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் பெண்களை மட்டுமே துரத்தி, துரத்தி கடிக்கிறது ஒரு கருங்குரங்கு. இதனால், அப்பகுதியில் நடமாட பெண்கள் பயப்படுகின்றனர்.

தேவாலா பகுதியிலுள்ள, வாழவயல் பகுதிக்கு செல்லும் சாலையில் கருங்குரங்கு ஒன்று பல மாதங்களாக முகாமிட்டுள்ளது. தேவாலா வனச்சரகத்திற்கு எதிரே முகாமிட்டுள்ள இந்த கருங்குரங்கு, பகல் முழுவதும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

மாலை வேளையில், வனச்சரகத்துக்கு எதிரில் சாலையோரத்தில் மறைந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்த வழியாக, பெண்கள் யாராவது தனியாக சென்றால் தாவிச்சென்று கடித்து குதறுகிறது. பெண்கள் தப்பித்து ஓடினாலும் துரத்தி சென்று கடிக்கிறது.

இதனால், இப்பகுதியில் பெண்கள் தனியாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களை கண்டால், ஒன்றும் செய்யாத இந்த கருங்குரங்கு பெண்களை மட்டுமே துரத்தி கடித்து வருகிறது. கடந்த, சில மாதங்களில் 15க்கும் மேற்பட்ட பெண்களை இந்த குரங்கு கடித்துள்ளது.வனச்சரகத்திற்கு எதிரிலேயே, இந்த கருங்குரங்கு அட்டகாசம் செய்து வருகிறது. ஆனால், வனச்சரக அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் உள்ளன

No comments: