Friday, 18 April 2008

டெல்லியில் ராமதாஸ்-பிரதமருடன் திடீர் சந்திப்பு

Ramadoss
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று திடீரென டெல்லி சென்றார். பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார்.

தமிழத்தில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதை முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் இயக்குநர் உபாத்யாயாவும் பேசிய விவரம் வெளியாகவே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாமக முக்கியப் பிரமுகர்களின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. எனவே அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இன்று அவசரமாக அவர் டெல்லி விரைந்தார். அங்கு பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் பேசினார்.

இட ஒதுக்கீடு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் பேசியதாக பின்னர் ராமதாஸ் தெரிவித்தார்.

No comments: