புராண காலத்தில் காமதேனு பசு, புற்றில் பால் கறந்து சிவனை பூஜித்ததாக படித்துள்ளோம். இந்த நவீன யுகத்திலும் கோமாதாவான பசு ஒன்று, வாரத்தில் ஒரு நாள் மட்டும் புற்றில் பால் கறந்து கடவுளை வழிபடுகிறது. சித்துர் மாவட்டம் பெத்த பஞ்சாணி அருகே, பசவகண்டிகை கிராமத்தில் இந்த விசித்திர நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த ஊரில் வெங்கடசாமி என்பவருக்கு சொந்தமான பசு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கன்றை ஈன்றது. ஒரு வேளைக்கு 5 லிட்டர் பால் தரும் இப்பசுவை, வெங்கடாசாமியின் மனைவி காந்தம்மாள், சில வாரங்களுக்கு முன் மேய்ப்பதற்கு காட்டுப் பகுதிக்கு ஒட்டிச் சென்ற போது, பசு தனது மடியில் இருந்து பாலை இங்குள்ள புற்றின் மீது சுரக்கச் செய்தது. பசுவின் இந்த செயலை பெரிதுபடுத்த நினைக்காத காந்தம்மாள் கடந்த திங்களன்றும் காட்டுப் பகுதிக்கு பசுவை மேய்ப்பதற்கு ஒட்டிச் சென்ற போது, இங்குள்ள பாம்பு புற்றின் மீது பாலை சுரக்கச் செய்தது. திங்கட்கிழமைகளில் மட்டும் புற்றின் மீது பாலை சுரக்கச் செய்யும் பசுவின் இந்த அற்புத செயலை கணவன் மனைவி இருவரும் கிராம மக்களிடம் தெரிவித்தனர். இந்த அதிசயத்தை நேரில் கண்ட இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பக்தி பூர்வமாக இந்த பசுவையும், பாம்பு புற்றையும் பார்த்து விட்டுச் செல்கின்றனர். இந்த புற்றுக்கு அருகில் ஒரு சிறிய அளவிலான சிவன் கோவில் உள்ளதால், இது கடவுளின் மகிமை தான் என கிராம மக்கள் கூறுகின்றனர். பெண்கள் பலர் பொங்கலிட்டும் வழிபட்டு வருகின்றனர்.
Wednesday, 9 April 2008
பாம்பு புற்றின் மீது பால் கறக்கும் பசு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment