Wednesday, 9 April 2008

இலங்கையின் ஊடக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேசம் அணிதிரள்கிறது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி சர்வதேச அளவில் நாளை (10-04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் எற்பாட்டில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்கள், மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் முன்பாக அந்தந்த நாடுகளின் ஊடக அமைப்புகள் ஊடக ஒடுக்குமுறையை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்ற ஆர்ப்பாட்ட கோஷத்தினை ஊடக அமைப்புகள் மேற்கொள்ளவுள்ளன. (பெல்ஜியத்தில் இருந்து–)

No comments: