ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர் ஒருவர் அக்கரைப்பற்று சாகமம் வீதியில் வைத்து நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை பிள்ளையான் குழுவினரே செய்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜே.வீ.பீயின் வேட்பாளர் ஒருவரும் அவருடன் இருந்த இரண்டு பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அக்கரைபற்று அரசடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 மோட்டார் சைக்கிள்களில் சென்ற முகமுடி அணிந்த சிலர் இவர்களை தாக்கியுள்ளனர்.
இரண்டு சிங்களவர்களும் ஒரு முஸ்லீம் இனத்தவருமே தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். கிழக்கு மாகாண தேர்தல் நீதியும் நியாயமுமான முறையில் நடத்தப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகள் சந்தேகம் வெளியிட்டு வந்தன, இந்த சந்தேகம் உறுதிப்படும் வகையில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் கூட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களுக்கு காவல்துறையினரால் தடையேற்படுவதாக நிஸார் காரியப்பர் வராந்த தேர்தல் இணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கூட்டங்களுக்கு மக்கள் மாலை வேளைகளில் தொழுகைகளை முடித்த பின்னரே கலந்துகொள்கின்றனர். இவ்வாறன நிலையில் மாலை 6 மணிக்கு பின்னர் ஒலிபெருக்ககளை பயன்படுத்த காவல்துறையினர் அனுமதிப்பதில்லை எனவும் நாடமாடும் தேர்தல் பிரசார வாகனங்களில் உள்ள ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை எனவும் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
Saturday, 19 April 2008
பிள்ளையான் மீது கொலை குற்றச்சாட்டு.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
PILLAYAN, LEADER OF THE TMVP IS RESPONSIBLE FOR THE KILLINGS OF 600 SRI LANKAN POLICEMEN AND 123 MUSLIM WORSHIPPERS IN THE EASTERN PROVINCE OF SRI LANKA. THE SRI LANKAN GOVT. WILL BE APPOINTING HIM TO BE THE CHIEF MINISTER OF THE EASTERN PROVINCE AFTER THE PROVINCIAL ELECTIONS.
Post a Comment