கம்பஹாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் வகித்த ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸ மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் பெயர்கள் மூன்று குழுக்களினால் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மஹிந்தானந்த அலுத்கமகே, ஜகத் புஸ்பகுமார, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் மேர்வின் சில்வா ஆகிய அமைச்சர்கள் ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸவை பிரதம கொறடாவாக நியமிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
எனினும், கட்சியின் மூத்த உறுப்பினரும், சிரேஸ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை இந்தப் பதவிக்கு நியக்குமாறு கட்சியின் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
Monday, 7 April 2008
ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு பசில்ராஜபக்ஸ?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment