சென்னையில் நேற்றுமுன்தினம் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பில் சினி டெக்னீசியன் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கலாட்டா செய்ததாக நடிகை ராதிகா கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவியுமான நடிகை ராதிகா சரத்குமார், பொதுச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் டி.வி.சங்கர், விகடன் டெலிவிஸ்டாசை சேர்ந்த சங்கர், பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை சேர்ந்தோர் உட்பட 10க்கும் மேற்பட்டோ ர் வந்திருந்தனர்.
ஆணையரை சந்தித்து மனு அளித்த பின்னர் வெளியே வந்த நடிகை ராதிகா நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு பணியில் பல்வேறு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் லைட்மேன் மற்றும் சினி டெக்னீசியன் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சினிமா அளவிற்கு சம்பளம் தர வேண்டும் என சமீப காலமாக கூறி வந்தனர்.
திரைப்படத்திற்கு 24 துறைகளின் ஒத்துழைப்பு வேண்டும். சின்னத்திரைக்கு 7 துறைகளின் பங்களிப்பு இருந்தால் போதும் என்ற நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தோடு கலந்து பேசி முடிவு சொல்வதாக நாங்கள் கூறியிருந்தோம். இந்நிலையில் நேற்று தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் "அரசி' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதே மருத்துவமனையின் மேல் தளத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் மீனா நடித்து வரும் "லட்சுமி' தொடரின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.
அப்போது சினி டெக்னீசியன் அசோசியேஷனை சேர்ந்த பெரியசாமி, லைட்மேன் சங்கத்தை சேர்ந்த சங்கர் உட்பட 50 பேர் கொண்ட கும்பல் படப்பிடிப்பு தளத்தில் நுழைந்துள்ளனர். அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டோ ர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கிருந்த விலை உயர்ந்த படப்பிடிப்பு சாதனங்கள் சேதமடைந்துள்ளது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் பயந்து போன தொழில்நுட்ப கலைஞர்கள் நேற்று ஷஸ்ரீட்டிங்கிற்கு வர மறுத்துவிட்டனர். இதனால் இன்றும் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.
அந்த இரு சங்கங்களையும் சேர்ந்தவர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர்களை கூடுதல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். நேற்று ஆணையரை சந்தித்து சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டுள்ளோம்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக நேற்று மாலை தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோன்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கும் சிம்ரன் தொடர் ஷஸ்ரீட்டிங்கிலும் கலாட்டா ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment