சென்னை: மிஸஸ் இந்தியா, மிஸஸ் ஹைதராபாத் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவரான சிமி குமார் என்ற பெண், ஆண்களை மோசடி செய்து ஏமாற்றி வருவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் மகளிர் அமைப்பைச் சேர்ந்த வக்கீல்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆணையர் நாஞ்சில் குமரனிடம் அவர்கள் கொடுத்துள்ள புகாரில், டெல்லியை சேர்ந்தவர் சிமி குமார் (வயது 26). சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தங்கி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு திருமதி. ஹைதராபாத் அழகிப் போட்டியிலும் திருமதி இந்தியா அழகிப் போட்டியிலும் பட்டம் வென்றுள்ளார்.
இவரது பொழுதுபோக்கே, நல்ல பணக்கார வாலிபர்களை மடக்க வேண்டியது. பின்னர் அவர்களுடன் 2 மாதம், 3 மாதம் என குடும்பம் நடத்துவது. அவர்களுடன் உல்லாசமாக இருக்கும்போது அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு, அதைக் காட்டி பெரும் பணத்தைப் பறித்துக் கொண்டு அந்த நபர்களை விட்டு அடுத்தவர்களுக்கு மாறுவதுதான்.
இவர் 2004ம் ஆண்டு சஞ்சய் மாலிக் என்ற பிரபலமான விபசார புரோக்கரை திருமணம் செய்தார். இவர் சர்வதேச அளவில் விபச்சாரம் நடத்தி வருபவர். கல்யாணமான சில தினங்களிலேயே சஞ்சய் மாலிக் டெல்லி போலீசில் மாட்டிக் கொண்டார்.
பின்னர் வேறு சிலரை திருமணம் செய்து கொண்டு பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்தார். கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கி சில தொழில் அதிபர்களை தனது வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரை உடனடியாக விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்
Wednesday, 16 April 2008
'மிஸஸ் இந்தியா' மீது விபச்சார-மிரட்டல் புகார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment