Monday, 7 April 2008

ஜெயராஜின் பாதுகாப்புக் குறித்து சர்வதேச புலனாய்துறை வழங்கிய தகவல் புறக்கணிக்கப்பட்டதா?

பாதுகாப்பில் அசம்ந்தப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது?
அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேவுக்கு பாதுகாப்பு வழங்கிய அதிரடிப்படையினரின் பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாகவே தற்கொலையளிகள் அவரை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் அகற்றப்பட்டு ஜெயராஜின் பாதுகாப்புக்காக அதிரடிப்படையினர் நியமிக்கப்படடனர். அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி அதிரடிப்படை கட்டளை அதிகாரிக்கு அனுப்பிய கடித்தை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் உட்பட முக்கிய புள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவினர் நன்கு பயிற்று விக்கப்பட்டவர்கள், இவர்கள் பாதுகாப்பு வழங்கும் நபர் செல்லும் இடம் அதற்கு முன்னர் செல்லும் இடம் ஆகியன தொடர்பில் காவல்நிலையத்துடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவர். குறிப்பிட்ட முக்கிய நபர் அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறும் வரை இந்த பாதுகாப்பு செயற்பாட்டில் இருக்கும். அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே வெலிவேறிய பிரதேசத்திற்கு சென்ற போது இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிரடிப்படையினர் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சிகளை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவர். இந்த நிலையில் அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கி அதிரடிப்படையினர் பொறுப்பினை ஏற்காது அந்த பொறுப்பை அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாவலர் தம்மிக்க மற்றும் அமைச்சர் மீதும் சுமத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் தமது கட்டளைகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் சம்பத்தன்றும் அவ்வாறே நடந்தனர் என்றும் அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க இவர்கள் இருவரும் இன்றில்லை.

சர்வதேச புலநாய்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

இதனிடையே 14 நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளையை 2 தற்கொலையளிகள் நெருங்கியுள்ளதாக இலங்கையின் விசேட புலனாய்வு பிரிவின் பிரதானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் நெருங்கியவர்கள் என கூறி இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இவர்கள் வந்துள்ளதாகவும் குறித்த சர்வதேச புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கையின் புலனாய்வுதுறையின் பிரதானி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து குறித்த வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் தாம் வழங்கும் ஆலோசனை ஏற்றுக்கொள்ளாவிட்டால்,தாம் வழங்கும் தகவல்களில் பயன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: