எதிர்கால பயணத்திற்கு தடையேற்படுத்தும் சூழ்ச்சிக்காரர்கள் மூன்று பேர் யார் என்பதை கட்சியின் தலைமைத்துவம் நன்கு அறியும் என ஜே.வீ.பீயின் வீரவன்ஸ பிரிவின் ஊடக பேச்சாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்கள் மூன்று பேர் கட்சிக்கு முக்கியமா?அல்லது கட்சி இதுநாள் வரை சென்ற பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் தற்போது எழுந்துள்ள முரண்பாடு காரணமாக கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி செல்லும் நிலையேற்பட்டுள்ளது.
இதனை கட்டுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த சூழ்ச்சிகாரர்கள் மூன்று பேரையும் கட்சியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் வீரவன்ஸ அணியினர் கட்சியின் தலைமைத்துவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த மூன்று பேர் யார் என சமரவீரவிடம் கேட்ட போது, தற்போது கட்சியில் அரசியல் கருத்தாடல்களே இடம்பெற்று வருவதால், குற்றச்சாட்டுகளை முன்வைக்க தமது அணியினர் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியில் உள்ள அந்த மூன்று சூழ்ச்சிக்காரர்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் தேவை ஏற்பட்டல் அதனை எதிர்காலத்தில் தமது அணி நாட்டுக்கு வெளிப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
வீரவன்ஸ தரப்பு கட்சியில் இருந்து பிரிய நேரிட்ட விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த கட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விமல் வீரவன்ஸவுடன் இந்த விடயம் குறித்து உரிய பேச்சுவார்த்தைகளை ஜே.வீ.பீயின் தலைமைத்துவம் மேற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டார்.
கட்சியின் செயலாளர் ஊடகங்கள் மூலம் வீரவன்ஸ தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தமது தரப்பும் ஊடகங்கள் மூலமே இதனை தெரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
Friday, 18 April 2008
ஜே.வீ.பீயில் சூழ்ச்சிக்காரர்கள் மூவர் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
JVP means second fiddling!
Roaring sound!
the treasury of mahindha is empty now,So,JVP is vacating the LODGE!
Post a Comment