Saturday, 12 April 2008

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவிற்கு மேலதிக பயிற்ச்சிகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை

ஸ்ரீலங்காவில் விசேட பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களை பாதுகாப்பதற்கான அமைச்சரவை பாதுகாப்பு பிரிவிற்கு மேலதிக பயிற்ச்சிகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் விசேட பிரமுகர்களிள் உள் வளைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சரவை பாதுகாப் பிரிவிற்கு ஏற்கனவே இந்தியாவின் கறுப்பு பூனைகள் படையணியால் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்தியாவில் பயிற்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன் அவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு உள்நாட்டில் பயிற்ச்சி பெற்ற அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் இக்கட்டான தருணங்களை எதிர்கொள்ளும் திறன் என்பன மிகவும் குறைவாக உள்ளதால் அவற்றை அதிகரிப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் மேலும் ஒரு தொகுதி பிடைச்சிப்பாய்களுக்கு கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் பயிற்சிகளை வழங்குவது குறித்து பூர்வாங்க பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பொன்னாண்டோ புள்ளேயின் படுகொலையை அடுத்து அரசாங்க அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பு தொடர்பான சர்சைகளை அடுத்தே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியாவின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.

No comments: