Saturday, 12 April 2008

நாடாளுமன்ற உறுப்பினரும், முக்கியஸ்த்தருமான, விஜித ஹேரத் குற்றம்சுமத்தியுள்ளார்.

ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனத்தை தாமே பயன்படுத்தும் கலாசரம் ஜே.வி.பியில் இல்லை. ஒருநாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்துவார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜயந்த விஜேசேகர நாடாளுமன்ற காவல்துறையினரிடம் கூறி, குறிப்பேட்டில் பதிந்த பின்னரே வாகனத்தை எடுத்துச் சென்று கட்சியின் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டன என கருத முடியாது. இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டமையானது கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜே.வி.பியின் பின்னணியை சீர்குலைக்கும் அரசாங்கத்தின் முயற்சியாகும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

No comments: