Tuesday, 22 April 2008

தங்களுக்கு வாக்களிக்காவிட்டால் வாக்களர் கொல்லப்படுவர்.

மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினர் வரப்போகின்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அப்படி வாக்களிக்க ப்படாவிட்டால் கொல்லப்படுவார்கள்

என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவினர் அங்குள்ள உதைபந்தாட்ட கழக இளைஞர்களை அழைத்து நடக்கப்போகின்ற தேர்தலில் நீங்கள் எந்த சின்னத்தில் வாக்களிக்கின்றீர்கள் என நாங்கள் வாக்குச்சீட்டுக்களிலிருந்து அறிந்துகொள்வோம்.

அப்படி நீங்கள் எங்களுக்கு வாக்குப்போடாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என அச்சுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: