Tuesday, 22 April 2008

யால காட்டில் காணாமல் போன மூவர் எரிக்கப்பட்ட சடலங்களாக மீட்பு

யால தேசிய வனத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் சியம்பலாண்டுவ என்ற இடத்தை சேர்ந்த மூன்று விவசாயிகளும் பான்மை, காட்டில்


எரிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவசாயிகள் மூவரும் மான்வேட்டைக்காக சியம்பலாண்டுவ காட்டை ஊடறுத்து யால தேசிய வனத்திற்குச் சென்ற போதே இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சியம்பலாண்டுவ பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மார்ச் மாதம் 5 ஆம் திகதி நான்கு விவசாயிகள் சியம்பலாண்டுவையிலிருந்து மான் வேட்டைக்குச் சென்ற போது ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சியை ஒருவர் தூக்கிவந்ததாகவும் மற்றைய மூவரும் இறைச்சியை தூக்கி வரமுற்பட்ட போது இனந்தெரியாதோரின் துப்பாக்கி வெடி ஓசை தனக்குக் கேட்டதென்றும் தப்பிவந்தவர் சியம்பலாண்டு பொலிஸில் புகார் செய்திருந்தார்.

அன்றிலிருந்து காணாமல் போன இந்த மூவரையும் தேடும் வேட்டையில் சியம்பலாண்டுவ பொலிஸாரும் பானமை பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை பானம காட்டில் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் இந்த மூவரது சடலங்களையும் கண்டு பிடித்துள்ளனர்.

இவர்களின் தலைப்பகுதி மிக மோசமான நிலையில் எரிந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: