Tuesday 8 April 2008

உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பர்ஜ் துபாய் பெற்றது

துபாய் : துபாயில் கட்டப்பட்டு வரும் பர்ஜ் துபாய் ( துபாய் டவர் ) கட்டிடம், உலகிலேயே மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அமெரிக்காவில் நார்த் டகோடா மாகாணத்தில் இருக்கும் கே.வி.எல்.ஒய் - டி.வி. டவர் தான் 1963 ம் ஆண்டில் இருந்து உலகின் மிக உயரமான கட்டிடம் என்று பெயரை வைத்திருக்கிறது. இதன் உயரம் 628.8 மீட்டர். அதாவது 2,063 அடி. ஆனால் இப்போது துபாயில் கட்டப் பட்டிருக்கும் துபாய் டவரோ ( பர்ஜ் துபாய் ) 629 மீட்டர் உயரத்தில், அதாவது 2,063.6 அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது. முந்தைய டவரை விட வெறும் .6 அடி மட்டும் உயரமாக கட்டி, பர்ஜ் துபாய் கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெயரை தட்டி சென்றுள்ளது.

1 comment:

வடுவூர் குமார் said...

சீக்கிரம அங்கு் போய் பார்க்கனும் அல்லது டிஸ்கவரியில் எப்படி கட்டினார்கள் என்று போடும்போதாவது பார்க்கனும்.