“ஒருவரின் பெயரைப் பொறுத்தே, அவரது அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் அமைகின்றன’ என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைப் போலவே, பிரிட்டனிலும், பெயரை வைத்து ஒருவரின் எதிர்காலம், குண நலன்கள் ஆகியவற்றை கணிக்கும் கலாசாரம் உருவெடுத்துள்ளது. ஹெர்ட்போர்ஷைர் பல்கலையை சேர்ந்த பேராசிரியர்கள், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களையும், அவர்களது பெயரையும் வைத்து, ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில்,”ஒருவருக்கு எப்படிப்பட்ட பெயர் அமைகிறதோ, அதை வைத்தே, அவரது அதிர்ஷ்டமும், புகழும் அமைகின்றன’ என தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: ஜேம்ஸ், எலிசபெத் போன்ற பெயர்களை வைத்துள்ளவர்களின் வாழ்க்கை, வெற்றிகரமாக உள்ளது. ரேயான், சோபியா போன்ற பெயர்களை உடையவர்கள், மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பர். அதே நேரத்தில், ஜாக், லுõசி போன்ற பெயர்களை உடையவர்கள், அதிர்ஷ்டம் இல்லாதவர்களாகவும், வாழ்வில் ஏமாற்றத்தை சந்திப்பவர்களாகவும் இருப்பர். தங்களது பெயர்களுக்கு முன், குடும்ப பெயர்களை இணைத்துக் கொண்டவர்கள், புத்திசாலிகளாகவும், வெற்றியை ஈட்டுவோராகவும் இருப்பர். “இ’என்ற ஓசையில், முடிவடையக் கூடிய பெயரை உடைய ஆண்கள், கவர்ச்சியானவர்களாக இருப்பர். பெண்களை பொறுத்தவரை மெல்லிய ஓசையுடன் உச்சரிக்க கூடிய பெயரை உடையவர்கள், கவர்ச்சியானவர்கள். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 6 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment